Monday, October 6, 2008

அஸிம் கம்ப்யூட்டர்ஜி

பிஸ்னஸ் வெற்றியாளர் கதையை எழுதுவதில் என்.சொக்கன் நிகர் என்.சொக்கன் தான். அவர் எழுதிய 'அம்பானி', 'சார்லி சாப்ளின்', 'அயோத்தி நேற்று வரை', 'வல்லினம் மெல்லினம் இடையினம்' போன்ற புத்தகங்களை படித்திருக்கிறேன். படிக்கும் போது அதில் ஏற்ப்பட்ட திருப்தியை விட இந்த புத்தகம் படிக்கும் போது அதிகம் திருப்தியாக இருந்தது. காரணம், கல்லூரியில் படிக்கும் போது சேர விரும்பிய நிறுவனங்களில் 'விப்ரோ'வும் ஒன்று. அவர்களின் வெற்றிக்கதையை மென்பொருள் நிறுவனத்தினர் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.



தந்தை M.H.பிரேம்ஜி மரணத்துக்கு பிறகு 'வனஸ்பதி' வியாபாரத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 'Western India Vegetable Products Limited' என்ற நிறுவனத்தை 'Western India Products Limited' என்று சுருக்கி, பிறகு 'WIPRO' என்று இன்னும் சுருக்கினார். பிரேம்ஜியிடம் எதையும் எண்களாக பேசுவது தான் பிடிக்கும். எத்தனை டின் வனஸ்பதி விற்பனை ? எத்தனை சதவிகிதம் முன்னேற்றம் ? என்று தான் பேச வேண்டும். (விப்ரோ நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இதை கவனித்துக் கொள்ளவும்)

பிரேம்ஜி பற்றியும் 'விப்ரோ'வை பற்றியும் பல சுவையான செய்திகள் இந்த புத்தகத்தில் உள்ளன. இதில் எனக்கு பிடித்தது......

1. பிரேம்ஜி தவிர அவர் குடும்பத்தில் யாரும் விப்ரோ நிறுவனத்தில் பணி புரியவில்லை. ( இவர் அரசியலுக்கு வந்தால் நல்ல இருக்கும்.)
2. விப்ரோவின் கம்ப்யூட்டர் தயாரிப்புப் பிரிவுக்கு ஆரம்பக்காலத்தில் 'எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு' என பெயர் வைத்தனர்.
3. விப்ரோவின் கணினிப் பிரிவு தொடங்கப்பட்ட புதிதில் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்க ஒருவர் வந்தார். பிரேம்ஜியுடன் பணியாற்றுவது சரிப்படாது என முடிவெடுத்து விலகினார். அவர் பெயர் நாராயணமூர்த்தி !
4. எல்லா துறைகளிலும் கால் பதித்த 'விப்ரோ' நிறுவனத்துக்கு 'ரெயின்போ ஃப்ளவர்' (Rainbow Flower Logo) வடிமைத்துக் கொடுத்தவர் ஷோம்பித் சென்குப்தா.
5. GEல் பணியாற்றிய விவேக் பால், 'விப்ரோவில் பணியாற்றி அந்த நிறுவனத்தை முன்னணிக்கு கொண்டுவந்ததில் முக்கிய பங்கு வகித்தவர். இருந்தும், சில கருத்து வேறுபாடால் 2005ல் 'விப்ரோவை' விட்டு விலகினார்.
6. பிரேம்ஜியை முழு வெற்றியாளர் என்று சொல்ல முடியாது. 'விப்ரோ ஃபைனான்ஸ்', 'விப்ரோ ISP' போன்ற நிறுவனங்கள் துவங்கி பல கோடி நஷ்டப்பட்டு முடினார்.
7. "நாம் போட்டியாளர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை கொடுப்பதும் தவறில்லை. பயம் கூட பரவாயில்லை. ஆனால், பயத்தால் போட்டியிலிருந்து பின்வாங்கி விலகி விடக் கூடாது" - என்று பிரேம்ஜியின் முக்கியமான பொன் மொழி.

வனஸ்பதி, சோப்பு, குழந்தைகளுக்கான பொருட்கள், மின்சார உபகரணங்கள், இயந்திரங்கள், மருத்துவக் கருவிகள், கணினி என்று எல்லா துறைகளிலும் விப்ரோ கால் பதித்துள்ளது. எல்லா துறைகளிலும் விப்ரோ இருந்தாலும், எதிலும் அவர்களுக்கு முதல் இடம் கிடைக்கவில்லை. அதே சமயம் கணிசமான நல்ல லாபம் ஒவ்வொரு துறையிலும் கிடைத்துக் கொண்டு வருகிறது.

Neither ‘First’ Nor ‘Worst’ but they are always ‘Best’ ! – ஒரு வரியில் Wipro சொல்லலாம்.

என்.சொக்கன்
பக்கங்கள் : 160, விலை:70
கிழக்கு பதிப்பகம்

4 comments:

சரவணகுமரன் said...

நெரிந்து - தெரிந்து
இந்தை - இதை
என்னக்கு - எனக்கு
நிருவனத்தில் - நிறுவனத்தில்
பிரேரம்ஜியுடன் - பிரேம்ஜியுடன்
முன்னனிக்கு - முன்னணிக்கு

Anonymous said...

அவர் மூத்த மகன் ரிஷாத் ப்ரேம்ஜி தற்பொழுது விப்ரோவில்தான் பணியாற்றுகிறார்.

Pls remove word verification.

குகன் said...

பிழையை திருத்தியதற்கு நன்றி சரவணகுமரன்.

//அவர் மூத்த மகன் ரிஷாத் ப்ரேம்ஜி தற்பொழுது விப்ரோவில்தான் பணியாற்றுகிறார்.//

ஒரு வேலை பழைய பதிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் தகவலுக்கு நன்றி Wiproite.

Anonymous said...

http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=49824800

கிழக்கு பதிப்பகம் பற்றிய Orkut குழுமம்...இணையவும்....
நன்றி...

 
Website Hit Counter
வந்தவர்கள்