Monday, September 22, 2008

லெனின் : முதல் காம்ரேட்

வர வர நான் கம்யூனிஸ்டாக மாறி விடுவேனோ என்ற சந்தேகம் எனக்கே வந்துவிட்டது. கம்யூனிஸ புத்தகங்கள் கண்ணில் படும் போது என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் 'கிழக்கு பதிப்பகம்' நூல் என்றால் சொல்லவே வேண்டாம். படித்து விட்டு தான் மறு வேலை பார்ப்பேன். சரி... இந்த புத்தகத்திற்கு வருவோம்.



ரஷ்யர்களால் மட்டுமல்ல... இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாராலும் மறக்க முடியாத ஒருவர் தான் 'லெனின்' அவர்கள். ஜார் ஆட்சியை ஒழித்து, ரஷ்ய மக்களின் உழைப்புக்கு உருவம் கொடுத்தவர். ஜார் அகராதியில் மக்களுக்கு இன்னொரு பெயர் ‘Serfs’; அதாவது அடிமைகள். நிலங்களை வாங்கும் போதும், விற்கும் போதும் அந்த நிலப் பகுதியில் வேலை செய்யும் அடிமைகளையும் சேர்த்தே விலை பேசுவார்கள்.இந்த நிலைமையை மாற்றியவர்.

captialist, socialist என்று பாகுபாடே இல்லாமல் எல்லோருமே தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய நபர் தான் லெனின்.

அவரை பற்றி இந்த புத்தகத்தில் சில குறிப்புகளை சொல்லியாக வேண்டும்

1.லெனின் சகோதரர் அலெக்ஸாந்தர் ஸிம்பெர்ஸ்க் பல்கலைக்கழகத்திலிருந்து தங்க மெடல் வாங்கியவர். ஜார் மன்னர் கொலை செய்யும் முயற்சியில் தோல்வி பெற்று தூக்கு தண்டனை பெற்றார். அக்காலக்கட்டத்த்லில் ரஷ்யாவில் பள்ளிக்கூடம் நடத்துவது தேசத் துரோகமாக கருதினர். ஆடுகள், மாடுகள், அடிமைகள் கொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

2.முதல் சந்திப்பிலேயே லெனினை வசீகரித்தவிட்டார் நதேஷ்தா. தன்னுடைய அழகினால் அல்ல. தொழிளார்கள் மீது கொண்ட மெய்யான கரிதத்தால்.

3.லெனின் தொடங்கிய அமைப்பின் பெயர் தொழிலாளி வர்க்க விடுதலைப் போராட்ட ஐக்கியம் (The League of Struggle for the Emancipation of the Working Class)

4.முதலாளித்துவம் எங்கெல்லாம் உச்சத்தில் இருக்கிறதோ, அங்கெல்லாம் இது போன்ற பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தவிக்க இயலாது என்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினார்.(இப்போதைய அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி இது தான் காரணமோ !!)

5.லெனினை ஏற்றுக் கொண்டவர்கள் போல்ஷ்விக்குகள் என்றும், எதிர்ப்பவர்கள் மென்ஷ்விக்குகள் என்றும் அழைத்தனர். முதல் உலகப் போரை வெளிப்படையாக எதிர்த்தவர் லெனின்.

6.ஜார் ஆட்சிக்கு பிறகு ஸ்டாலின் தலைமையில் செம்படை (Red Army) அமைத்தார் லெனின்.

7.மொத்தம் 15 கோடி ஹெக்டேர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு, குடியானவர்களுக்கு பிரித்துக் கொடுத்து நில புரட்சியை ஏற்ப்படுத்தினார்.

8.மார்ச் 21, 1921 புதிய பொருளாதாரத் திட்டம் (New Economic Policy) நடைமுறைக்கு வந்தது.

ஒரு முறை லெனினை, பன்யா கப்லான் (Fanya Kaplan)என்ற பெண் கொலை செய்ய முயற்சிக்க அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக லெனின் மரணத்தின் போது பேசிதாக கீழ் கண்ட வாசகங்கள் எழுதியது மிகவும் அருமை.

லெனின் மரணத்தின் போது……

நண்பர்கள் கருத்து :
லெனின் நினைவுகள் போது. உடல் வேண்டாம்

எதிரிகள் கருத்து :
லெனினின் நினைவுகள் கூட ஆபத்தானவை. அவர் உடல் அதை விட ஆபத்தானது. எரித்துவிடுங்கள்.

மக்கள் கருத்து :
தோழர் லெனினின் நினைவுகள் வேண்டும். தோழர் லெனினும் வேண்டும்.

அடுத்த இரண்டு மாதங்கள் எந்த கம்யூனிஸ புத்தகங்கள் படிக்க கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருந்த போது... என் கண்ணில் 'மாவோ' புத்தகம் கண்ணில் பட்டது. நல்ல வேளை வாங்க என் கையில் பணமில்லை. கிரடிட் கார்ட் அந்த புத்தகக்கடையில் வாங்க மாட்டார்களாம். தப்பித்தேன். இன்னும் என் விரதத்திற்கு ஒரு மாதம் இருக்கிறது.

மருதன்.
விலை- 70, பக்கங்கள்- 174
கிழக்கு பதிப்பகம்.

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்