Monday, September 8, 2008

மோதிப் பார் ! : ஹியூகோ சாவேஸ்

இந்த நூலை படிக்கும் வரை ஹியூகோ சாவேஸ் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால், இப்போது இவருக்கு ஒரு ரசிகர் மன்றமே அரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த நூலை படித்த பிறகு சாவேஸ் பற்றி நான் தெரிந்துக் கொண்ட விஷயங்கள் :- எந்த வித புரட்சியிலும் இறங்காமல், கெரில்லாத் தாக்குதல் நடத்தாமல் தேர்தல் மூலமாக தான் ஆட்சியை பிடித்தார். பின்தங்கியிருந்த தனது நாட்டை வளரும் நாடாக மாற்றியவர். இருப்பத்தோராம் நூற்றாண்டில் புரட்சிக்கு வேறு கோணத்தை கொடுத்தவர்.
இவர் துணிச்சலை பற்றி இரண்டு சம்பவங்களை சொல்லியாக வேண்டும்.
1.ஐ.நா சபையில் பூஷ்யை “சாத்தான்” என்று தைரியமாக விமர்சித்தவர் ஹியூகோ சாவேஸ் அவர்கள். ஐ.நா.வை பேசாமல் ஜெரூசலமுக்கோ அல்லது வேறு ஒரு வளரும் நாட்டுக்கோ மாற்றிவடலாம் என்று யோசனை கூறியவர்.
2."மூன்று வேளை உணவு கிடைக்காமல் எத்தனையோ அமெரிக்கர்கள் சிரமப்படு கொண்டு இருக்கிறார்கள். மருத்துவ வசதி எல்லோருக்கும் கிடைக்கவில்லை. எத்தனையோ எழைகள் வீடில்லாமல் அலைந்துக் கொண்டு இருக்கிறார்கள். இத்தனை இருக்கு அமெரிக்க 500 மில்லியன் டாலர் பணத்தை ஆயுதம் வாங்க செலவு செய்கின்றது. இந்த பணத்தை மிச்சம் பிடித்தால் அமெரிக்காவில் உள்ள ஏழைகள் மட்டுமல்ல, ஆப்ரிக்காவில் உள்ள ஏழை மக்கள் மறுவாழ்வு பெறுவார்கள்" ஒரு பேட்டியின் போது கூறினார்.

இந்த புத்தகத்தை எடுத்து படித்த முக்கிய காரணம், இதன் மேலட்டையில் காஸ்ரோவுக்கு அடுத்த லத்தின் அமெரிக்க தலைவர் என்று குறிப்பிட்டதால் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து ரேடியோ நிகழ்ச்சியில் ஒன்றாக பாடினார் என்று படிக்கும் லத்தின் அமெரிக்கர்களின் ஒற்றுமையை காட்டுகிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் இருக்கும் வளங்களை உட்கார்ந்து நின்று அழித்த பெருமை அமெரிக்காவை எதிர்க்கும் இன்னொரு நாயகன் தான் ஹியூகோ சாவேஸ் .

ஒரு நாடு வளர்கிறது என்றால் அமெரிக்கர்களுக்கு வயறு பத்திக் கொண்டு எரியும். காஸ்ட்ரோவுக்கு பிறகு ஹியூகோ சாவேஸ் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இரத்த கோதிப்பே வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தன் உள்நாட்டு கலவரத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று ஆதாரத்துடன் நிருப்பித்துள்ளார் (பூஷ் அரசு சாவேஸ் அரசை கவிழ்க்க சி.ஐ.ஏ ஏஜென்டுக்களான எலியட் ஆப்ரம்ஸ் (Eliot Abrams) மற்றும் ஓட்டோ ரிச் (Otto Reich) நியமித்துள்ளனர்). ஹியூகோ சாவேஸ் கொல்ல யோசனை சொன்னவர் ரிவரெண்ட் பாட் ராபர்ட்ஸன் (அமெரிக்க பாதரியார்)

இவரை பற்றி சுவையான சில தகவல்கள் :

1.ஜூலை 24,1983, பொலிவரின் 200வது பிறந்த நாளைக் கௌரவிக்கும் வகையில் MBR 200 (Bolivar Revoltionary Army 200) தொடங்கினார்.
2.La Causa Radical சுருக்கமாக Causa R (1971ல் தொடங்கப்பட்ட இயக்கம்) சாவேஸ் இயக்கத்துடன் இணைந்தது. ஆனால், புரட்சியின் போது இறுதி கட்டத்தின் ஓதுங்கி கொண்டனர். மனம் தளராமல் புரட்சியில் இறங்கி இரண்டு வருடம் சிறை சென்றார்.
3.அரசாங்கம் சந்திக்கும் முதல் பெரும் செலவு இராணுவத்துறை தான். ஆனால், சாவேஸ் தனது இராணுவ வீரர்கள் நாட்டு வளர்ச்சிக்காக பயன் படுத்தினார். மீன் பிடிக்கவும், வீட்டை கட்டிக் கொடுக்கவும், பள்ளிப் பாடம் எடுக்கவும் இராணுவ வீரர்கள் உதவியாக இருந்தனர்.
4.நில சீர்திருத்த சட்டத்தால் 21 நபர்கள் 612289 ஹேக்டேர் நிலத்தை சுருட்டி இருப்பதை கண்டு பிடித்து, அந்த இடங்களை எல்லாம் அரசுக்கு சொந்தமாக்கினார்.
5.வளைகுடா போருக்கு பிறகு சதாமைச் சந்தித்த ஒரே தலைவர் இவர் தான். அவர் வேண்டுக்கொள்ளை ஏற்று OPEC அமைப்பு 25 டாலர் விலையில் இருந்து 60 டாலராக உயர்த்தியது.
6.காஸ்ட்ரோவை முன்னோடியாக கொண்டு ஆட்சி செய்தாலும் இவர் கம்யூனிஸ்ட் இல்லை.
7."மீனுக்கு தண்ணீர் ; இராணுவத்துக்கு மக்கள் " – மாவோ வழி நடப்பவர்.

தன் நாட்டையும் கவனித்துக் கொண்டு அமெரிக்கவையும் சமாளிக்கும் ஒரு போராளியின் வாழ்க்கையை மருதன் அவர்கள் நன்றாக எழுதியுள்ளார். ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஹியூகோ சாவேஸ் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.


மருதன் : பக்கங்கள் :126
விலை.60. கிழக்கு பதிப்பகம்

6 comments:

மோகன்தாஸ் said...

//காஸ்ட்ரோவை முன்னோடியாக கொண்டு ஆட்சி செய்தாலும் இவர் கம்யூனிஸ்ட் இல்லை.//

காஸ்ட்ரோ கம்யூனிஸ்டா?

யார் சொன்னது!

Anonymous said...

மோகந்தாஸ் - உலத்தில் இன்று உண்மையான கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதே இல்லை என்று தானே சொல்லவற்றீங்க்! உங்க காந்தி செத்துட்டாரா டயலாக் போல உள்ளது.

ஹியூகோ சாவேஸ் - மோதிப் பார் கிழக்கு பதிப்பகத்தின் கெட்டலாகில் நேற்று பார்த்தேன். இதெல்லாம் யார் படிப்பார்கள் என்று நினைத்தேன். பராவாயில்லை மக்களின் ரசனை விரிவடைந்துள்ளது.

ஒரு கேள்வி இணையத்தில் கிடைக்காத விஷயங்கள் எவ்வளவு இந்த புத்தகத்தில் உள்ளது ?

நன்றிகள் பல.

கலையரசன் said...

சாவேசை பதவி கவிழ்க்க நடந்த சதியையும், அதன்பிறகு மக்கள் எழுச்சியினால் சாவேஸ் மீண்டு வருவதைக் காட்டும் முழுநீள ஆவணப்படத்தை எனது பதிவொன்றில் இணைத்துள்ளேன். அதனைப்பார்வையிட:

ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லைவெனிசுவேலாவில் சாவேஸ் முன்னெடுத்து வரும் சோஷலிச மாற்றங்களைப் பற்றியதான எனது கட்டுரை ஒன்று:
வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்

வெனிசுவேலா மட்டும் அல்ல, பொலிவியா, எக்குவடோர், நிகரகுவா,ஆர்ஜெந்தீனா, பிரேசில் என்று பல நாடுகளில் நடந்த தேர்தல்களில் சோசலிச-சமூக மாற்றத்தை கொண்டுவர விரும்புவோரை மக்கள் தெரிவு செய்துள்ளனர். எமது மக்கள் எப்போது உணரப் போகிறார்கள்?

குகன் said...

வருகைக்கு நன்றி மோகன் தாஸ். அந்த புத்தகத்தில் படித்ததை தான் இங்கே சொல்லியிருக்கிறேன். அது மட்டுமல்ல மருதன் எழுதிய " காஸ்ட்ரோ : சிம்ம சோப்பனம்" என்ற புத்தகத்தையும் படித்திருக்கிறேன். அதிலும் அவர் கம்யூனிஸ்ட் என்று தான் கூறிப்பிட்டுள்ளது.

குகன் said...

நன்றி mrcritic.

கலையரசன் ! உங்கள் ஏக்கம் சரியானது. தங்களுடைய வலைப்பதிவு "ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை" நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் !

மோகன்தாஸ் said...

mrcritic, குகன்,

"influence is nothing. I don't agree with communism. We are democracy. We are against all kinds of dictators.... That is why we oppose communism."

இதைச் சொன்னது காஸ்ட்ரோ தான். சொன்னது 1959 வாக்கில்.

பின்னர் 1961ல் அமேரிக்கா கியூபா மேல் படையெடுத்து வந்ததும், ரஷ்யாவின் உதவிவேண்டி வேறு வழியில்லாமல்,

"Castro declared that he was a Marxist-Leninist and that Cuba was adopting Communism."

------------------

http://blog.mohandoss.com/2006/02/blog-post_17.html

ரொம்ப காலம் முந்தி நான் எழுதிய ஒரு பதிவு காஸ்ட்ரோ பற்றி. வேறு புத்தகம் ஒன்றில் கூட படித்திருந்தேன் காஸ்ட்ரோ தன்னை கம்யூனிஸ்டாக ஒப்புக் கொண்டதில்லை என்று எங்கே என்று மறந்துவிட்டேன் ;)

mrcritic,

சாவோஸ் மாதிரி தான் காஸ்ட்ரோ கூட கம்யூனிஸ்ட் இல்லை என்று சொல்ல வந்தேன்.

 
Website Hit Counter
வந்தவர்கள்