Monday, November 10, 2008

என் பெயர் எஸ்கோபர்

பா.ராகவன்

தீவிரவாத இயக்கங்கள், குற்றவாளி, அரசியல் அமைப்பு பற்றிய குறிப்புகள் என்று வாசகர்களின் தேடலுக்கு கிழக்கு பதிப்பகம் சங்கம்மாக இருக்கிறது. குற்றவாளிகளை ஹீரோவாக்காமல் அவர்கள் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டும் தனி சிறப்பு கிழக்கு பதிப்பக நூல்களுக்கு உண்டு. பா.ராகவன் அவர்கள் எழுதிய 'டாலர் தேசம்', 'பாக்- ஒரு புதிரின் சரிதம்', ‘9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி’ நூல்களை படித்ததில் இருந்து அவர் எழுத்துக்கள் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. இந்த நூலும் அப்படி தான். சர்வதேச கடத்தல்க்காரன் ‘பாபிலோ எஸ்கோபர்’ பற்றிய வரலாறு.



பெரிய கொள்கையோ லட்சியமோ எதுவுமில்லை. பணம் மட்டும் தான் குறிக்கொள். அதற்காக எதையும் செய்பவன். யாரையும் கொல்ல தயங்காதவன் . நாலாயிரத்து மேற்ப்பட்டவர்களின் மரணத்துக்கு நேரடியாக சம்மந்தப்பட்டவன். கொலும்பியா அரசாங்கத்தை அச்சுருத்திய தனி மனிதன் பாபிலோ எஸ்கோபர்.

கார் திருடனாக தன் வாழ்க்கையை தொடங்கி பிறகு கொகெய்ன் கடத்தலில் ஈடுப்படத் தொடங்கினான். கொலும்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கும், ஐரோப்பியாவுக்கும் ‘கொகெய்ன்’ கடத்தலில் அதிக லாபம் சம்பாதித்தான். தன் கடத்தல் முகத்தை மறைக்க அரசியலில் இறங்கி எம்.பி யாக பொறுப்பேற்றார். ( நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இவர் தான் முன்னோடி )

தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 20 நாள் கேஷூவல் லீவு, ஆறு மெடிக்கல் லீவு. 50 வயதில் ஓய்வுதியம், பி.எஃப், பென்ஷன் போன்ற எல்லா வசதிகளும் உண்டு. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் கடத்தல் தொழிலை கார்ப்பிரேட் நிறுவனத்தை நடத்துவது போல் நடத்திக் கொண்டு இருந்தான். தன் கடத்தலை தடுக்க நினைத்த அரசு அதிகாரி, போலீஸ், நீதிபதி உட்ப்பட யாராக இருந்தாலும் பட்டியல் போட்டு கொளை செய்துள்ளான்.

எஸ்கோபரின் கொகெய்ன் கடத்தலால் அமெரிக்க இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதனால், அவனை கொலை செய்ய சி.ஐ.ஏ மேற்க் கொண்ட நகைச்சுவை நடவடிக்கைகளை அழகாக பா.ராகவன் அவர்கள் சொல்லியுள்ளார்.

எல்லா கடத்தல்க்காரர்களும் ஒரே மாதிரி தான். எஸ்கோபர் மட்டும் அப்படி என்ன பெரிய வித்தியாசமானவனாக இருக்க முடியும் என்று நினைத்தேன். தன் சமந்தப்பட்ட கோப்புகளை அழிக்க எம் - 19 இயக்கத்தின் உதவியுடன் நீதிமன்றத்தை முற்றுக்கையிட்டு, பல நீதிபதிகளை கொன்று கோப்புகளை அழித்தான். பல கடத்தல்க்காரர்களுக்கு அவனுடைய வாழ்க்கை பயணம் தான் 'வெற்றி கைட்' (Guide).

தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் முதல் முறையாக அவனுடைய ஒன்பது கோடி ரூபாய் சரக்கு எங்கு போனது என்று அவனுக்கேதெரியாது. அதற்காக கவலைப்படும் அவகாசம் கூட அவனுக்கு இல்லை. Search Bloc சுட்டுக் கொள்ளப்பட்டு பரிதாபமாக இறந்தான்.

தொன்னூறு ஆரம்பத்தில் இருந்த பயங்கரவாத கடத்தல்காரனை பலர் மறந்திருக்க கூடும். என்னை போன்ற புது வாசகர்கள் எஸ்கோபர் யார் என்று கூட தெரிந்திருக்காது. எல்லா வாசகர்களுக்கு புரியும் படி பா.ராகவன் எழுதிருப்பது தான் இந்த நூலின் தனி சிறப்பு. ஆரம்ப முதல் முடிவு வரை ஒரு கதை விளக்குவது போல் நன்றாக விளக்கியிருக்கிறார்.

பக்கங்கள் : 224 ,
விலை : 90.
கிழக்கு பதிப்பகம்

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்