ஒவ்வொரு புத்தகமும் ஒரு நண்பனுக்கு சமம் என்பார்கள். ஆனால், எஸ். ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' பல நண்பர்களுக்கு சமமான நூல் என்று தான் சொல்ல வேண்டும். தன் தேடல் பயணத்தில் சந்தித்த பல நண்பர்களையும், இலக்கியவாதிகளையும் கட்டுரை வழியாக சொல்லும் போது உணர்வு பூர்வமான சிறுகதை படித்த திருப்தி இருந்தது. ஒரே புத்தகத்தில் வாசகர்களை பல மனிதர்களை சந்திக்க வைத்திருக்கிறார். மனிதனின் பல நிறங்களை புரிய வைத்திருக்கிறார். நகரத்தில் வாழ்ந்தவர்கள் இந்த நூலை படித்து முடித்த பிறகு இந்த நூலில் சொல்லும் இடங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக வரும். பல புத்தகங்களை படித்து எழுதுவதை விட ஒவ்வொரு மனிதனையும், ஊரையும் படித்து எழுதியதால் அவர் எழுத்துக்களில் அதிக ஜீவன் இருக்கிறது.
'தலையறு பட்டுப்போன குழந்தையின் விளையாட்டு பொம்மையை ஒரு நாள் பார்த்த போது தான் குழந்தையிலிருந்து எவ்வளவு தூரம் பயணம் செய்து வளர்ந்து விட்டேன் என்பது புரிந்தது" என்ற வரிகள் நெகிழவைக்கிறது. " நிறமில்லாதொரு குடும்பம்", " ஹிரண்ய ஸ்நேகம்", "அன்பின் விதைகள்" போன்ற கட்டுரைகள் என் மனதை மிகவும் பாதித்தது. குறிப்பாக 'அன்பின் விதைகள்' கட்டுரையில் படித்தால் என்னை நினைத்து நானே வெட்கப்பட்டு கொண்டேன். சாதாரன வாட்ச்மென் பூமிநாதன் தன் மாத சம்பளத்தில் நூறு ரூபாய் மற்றவர்களுக்காக ஒதுக்கும் போது நம்மால் ஏன் செய்ய முடியவில்லை என்று எனக்குள்ளே கேள்வி எழுந்தது.
உறுபசி கட்டுரையில் ' வித்த முயற்சிக்கும் போது புத்தகத்தை வாங்குவது எளிது, விற்பது கடினம் என்று புரிந்தது' என்ற வரிகள் மிகவும் அருமை. பல பத்திப்பகங்களுக்கும் இதே நிலை தான். நல்ல புத்தகம் சிலபமாக போட்டு விடுகிறார்கள், ஆனால் வாங்கவோ, லைப்பரி ஆர்டர் கொடுக்கவோ ஆட்கள் தான் இல்லை.
இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..
காய்ச்சல் ஒரு நோயல்ல. உடல் எடுத்துக் கொள்ளும் ஓய்வு என்று தோன்றுகிறது.
"எண்ணும் எழுத்தும்" கட்டுரையில் ' நாம் இன்னமும் நம்மை மட்டும் விற்பதற்கு விலை பேசாமல் இருக்கிறோம். சந்தர்ப்பம் இல்லாமலா அல்லது விலை நிர்ணயிக்க முடியாமலா என்று மட்டும் தான் தெரியவில்லை;
"மனக்குகையில்" கட்டுரையில் ' அவமானமும், அலைச்சலும், கசப்பும் தான் எழுத்தாளனின் சமையல் பொருட்கள் என்று தோன்றியது.
எஸ். ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' நூல் படித்து முடித்தவுடன் நான் அவருடை வாசகனாகவே மாறிவிட்டேன். அவர் எழுதிய 'நெடுங்குருதி' படிக்க தொடங்கியிருக்கிறேன். 'நெடுங்குருதி' நூலை பற்றி இந்த வலைப்பதிவில் விரைவில் எதிர்பாருங்கள்.
முகவரி
விகடன் பிரசுரம், விலை.110
757, அண்ணா சாலை,
சென்னை - 2
Monday, December 8, 2008
எஸ்.ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து'
Labels:
எஸ்.ராமகிருஷ்ணன்,
புத்தகம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்களைப் போலவே நானும் எஸ் ராவின் எழுத்திற்கு நீண்டநாள் வாசகம்.
அவருடைய கதாவிலாசமும் படித்து பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும்.
துணையெழுத்தில் நிறைய கதாபாத்திரங்கள் நம் மனதை விட்டா நீங்காத பாத்திரங்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்
மயிலாடுதுறை சிவா...
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நெடுங்குருதி, அரவான் படித்து முடித்து விட்டேன்.
நான் படிக்க போகும் அவரின் அடுத்த புத்தகம் "கதாவிலாசம்" தான்.
சென்னை புத்தக கண்க் காட்சியில் வாங்கிவிடுகிறேன்.
நன்றி மயிலாடுதுறை சிவா.
Post a Comment