இன்றைய 'வலைப்பதிவர்கள் சந்திப்பு' நன்றாக நடந்தது.
இது என்னுடைய முதல் பதிவர் சந்திப்பு என்பதால் இன்று தான் எல்லோரையும் பார்த்தேன். கேபிள் சங்கர், அக்னி பார்வை, லக்கி லுக், டோண்டு, முரளி, ஜியோவ்ராம் சுந்தர் , 'பாலம்' பாலா, மதுரை கணேஷ், அதிஷா என்று ஒரு பெரும் பட்டியலே உண்டு. (எல்லோருடைய பெயரும் என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை).
முரளி அவர்கள் தன் முதலில் பேசி சந்திப்பை தொடங்கி வைத்தார். முரளி பேசும் போது அதிஷா தன் கையை அசைத்து அவர் பேச கூடாது என்பது போல் சைகை காட்டினார். பிறகு தான் தெரிந்தது அவர் கொசுவை விரட்டுகிறார் என்று...! பலர் இன்று பேசியதை விட கொசுவை விரட்டியது தான் அதிகம். (நான் பதினைந்து கொசுவை கொன்றேன்)
'திருமணம் ஆனவர்கள் படும் கஷ்டங்கள்' என்று முதல் அரை மணி நேரத்துக்கு மொக்கை போட்டோம். இதில் திருமணம் ஆகாதவர்கள் வாய்யை திரக்கவில்லை. 'பாலம்' பாலா, முரளி, கேபிள் சங்கர், மதுரை கணேஷ் போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை சொன்னார்கள்.( ஒரு சில கருத்தில் நண்பர்கள் அனுபவம் என்று தங்கள் சொந்த அனுபவத்தை பேசியது போல் இருந்தது).
அடுத்த தலைப்பு...'அரசியல்'. தி.மு.க, அ..தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் என்று எல்லா கட்சிகளின் இன்றைய நிலவரத்தை பற்றி பேசினோம். கலைஞர், ஈழ தமிழம் பற்றி பேசும் போது ஒருவர் எங்களையே பார்த்துக் கொண்டு இருந்தார். ( யாராவது புலிகளுக்கு ஆதரவாக பேசி விடுவார்களோ !, உள்ளே சென்று விடுவோமா ! என்ற பயம் உள்ளூர இருந்தது.)
சில வருடங்களுக்கு முன்பு 'அந்த' மாதிரி புத்தங்கள் தேவி தியேட்டர் வெளியே விற்பதை பற்றி லக்கி லுக் கூறினார்.இப்போது 'அந்த' புத்தங்கள் அதிகம் விற்க்கப்படவில்லை என்பதை மன வருத்ததுடன் சொன்னார். தன்னிடம் பித்தியேக கலேக்ஷனாக 20,25 புத்தகங்கள் இருப்பதாக பேசினார். ( நம் வலைப்பதிவர் நலனுக்காக தன் பதிவில் பொடுவார் என்று எதிர்பார்க்கலாம்.) அதே போல், அதிஷா அவர்கள் தன் செல்போனில் இருக்கும் தத்துவ பாடலையும் வலைப்பதிவில் போடுவதாக சொன்னார். (மிக விரைவில் தமிழ்நாடே உச்சரிக்க போகும் பாடல் அதுவாக தான் இருக்கும்.)
ஒரு தியாகி ( முரளி கண்ணன் என்று நினைக்கிறேன்) புன்னியத்தில் எல்லோரும் தேநீர் அருந்தினோம். லக்கி லுக், ஜியோவ்ராம் சுந்தர் வழக்கம் போல் 'சாரு நிவேதா' பற்றி பேச தொடங்கினர். கேபிள் சங்கர், மதுரை கணேஷ் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள். எல்லோரிடமும் கை குழுக்கியப்படி விடைப்பெற்றுக் கொண்டேன்.
முகம் தெரியாமல் பின்னூட்டம் எழுதுவர்களையும், பதிவர்களையும் நேரில் பார்க்கும் போது வித்தியாசமான அனுபவமாக தான் இருந்தது. இது போன்ற சந்திப்பு குறைந்தது மூன்று மாதம் ஒரு முறையாவது நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
பெயர் விடுப்பட்ட நண்பர்கள் என்னை மன்னிக்கவும்...!
Saturday, December 27, 2008
நடேசன் பார்க்கில் பதிவர்கள் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//( ஒரு சில கருத்தில் நண்பர்கள் அனுபவம் என்று தங்கள் சொந்த அனுபவத்தை பேசியது போல் இருந்தது). //
இதுல எதோ உள்குத்து இருக்கிறாப்புல தெரியுதே..
அது சரி இந்த வேர்ட் வெரிபிகேஷனை தூக்கிடுங்க..
//இதுல எதோ உள்குத்து இருக்கிறாப்புல தெரியுதே..//
illai. veli kuthu thaan
//இந்த வேர்ட் வெரிபிகேஷனை தூக்கிடுங்க..//
எதை தூக்க வேண்டும்...? புரியவில்லை. குறிப்பிட்டு சொல்லுங்கள். தூக்கிவிடுகிறேன்.
//இது போன்ற சந்திப்பு குறைந்தது மூன்று மாதம் ஒரு முறையாவது நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.//
மாதத்துக்கு ஒரு வாட்டி நடந்துக்கிட்டு இருக்கு. நீங்க என்ன பயங்கர கேப் விடுறீங்க...
//பலர் இன்று பேசியதை விட கொசுவை விரட்டியது தான் அதிகம். // ஆஆங்க....
யம்மா... எந்தாஆந்தண்டி. முடியல.
கொஞ்சநேரத்துக்கு அப்புறம் என் பதிவு பக்கமா வாங்க... புகைப்படம் மற்றும் விடீயோக்களை பார்க்கலாம்.
நல்ல பதிவு.
லக்கிலுக் சொன்னது போல, காமக் கதைகள் உள்ள புத்தகங்கள், சினிமாக்கள் வியாபாரம் இணையம் வந்த பிறகு மிகவும் பாதிப்பு அடைந்த ஒரு தொழில்
இனிமேல் அதிஷா, லக்கிலுக் போன்றவர்கள் பதிவர் சந்திப்புகளை வீடியோ எடுத்து பதிவிட வேண்டுகிறேன்.
குப்பன்_யாஹூ
.
nice covarage
// அத்திரி said...
மாதத்துக்கு ஒரு வாட்டி நடந்துக்கிட்டு இருக்கு. நீங்க என்ன பயங்கர கேப் விடுறீங்க...//
மாதத்துக்கு ஒரு வாட்டியா...!! சொல்லவே இல்ல... ஒவ்வொரு மாதமும் ஆஜர் ஆகிடுறேன்...
// குப்பன்_யாஹூ said...
லக்கிலுக் சொன்னது போல, காமக் கதைகள் உள்ள புத்தகங்கள், சினிமாக்கள் வியாபாரம் இணையம் வந்த பிறகு மிகவும் பாதிப்பு அடைந்த ஒரு தொழில் //
விவசாயி கஷ்ட படுறாங்க... ITயில பல பேருக்கு வேல போய்ட்டு இருக்கு... புது வருஷத்தில இன்னும் வேல போகும் பயம்... இப்படி தொழில் சம்மந்தமான பல பிரச்சனைகள் இருக்கு... 'காம கதைகள் புத்தகத்துகாக இப்படி ஃபில் பண்ணுறீங்க...
// முரளிகண்ணன் said...
nice covarage //
நன்றி முரளிகண்ணன் :)
Post a Comment